×

திமுகவும், காங்கிரஸும் ஒரே அணியில், ஒரே சிந்தனையில் பயணித்துக் கொண்டிருக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: நாட்டின் வளர்ச்சிக்காகவும், ஒற்றுமைக்காகவும் திமுகவும், காங்கிரஸும் ஒரே அணியில், ஒரே சிந்தனையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கரின் இல்லத் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். பின்னர் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்;

ராகுல் காந்தி என்னை மூத்த அண்ணன் என்றே குறிப்பிடுகிறார்; நான் அவரை சகோதரர் என்பேன். ராகுல்காந்தி என்மீது காட்டும் தனிப்பட்ட அன்பு அளவு கடந்தது. திமுக, காங்கிரஸ் உறவு நிச்சயம் இந்தியாவை காப்பாற்றும். ராகுல்காந்தி என்மீது காட்டும் தனிப்பட்ட அன்பு அளவு கடந்தது. திமுகவும், காங்கிரசும் ஒரு காலத்தில் வெவ்வேறு பாதைகளில் பயணித்தன. ஆனால் நாட்டு நலன் கருதி திமுகவும், காங்கிரசும் தற்போது ஒரே அணியில் பயணித்து வருகின்றன. திமுக-காங்கிரஸ் உறவு, அரசியல் உறவாக மட்டுமல்லாமல் கொள்கை உறவாகவும் வலுப்பெற்று இந்தியாவின் குரலாக எதிரொலிக்கிறது. சுயமரியாதை திருமணத்துக்கு திமுக ஆட்சியில் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Tags : DIMUKA ,CONGRESS ,MU ,K. Stalin ,Chennai ,Chief Minister ,Dimuga ,Virudhunagar East District Congress ,President ,Raja Chokar ,Artist Hall ,Anna Vidyalaya, Chennai ,
× RELATED அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு...