- யூனியன்முஸ்லீம்
- இந்தியாவின் நூற்றாண்டு கொண்டாட்டம்
- சென்னை
- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
- சிராஜுல் மில்லத்
- அப்துசமுத் நூற்றாண்டு விழா
- வேப் பெரியார் திடல்
- ஜனாதிபதி
- கே. எம். காதர் மோகிடின்
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாபெரும் தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமது நூற்றாண்டு விழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முகமது அபூபக்கர் வரவேற்றார். முதன்மை தலைவர் அப்துல் ரஹ்மான், மாநில துணை தலைவர் கே.நவாஸ் கனி எம்பி, தேசிய செயலாளர் அப்துல் பாசித், தேசிய துணை செயலாளர் ஏ.எஸ்.பாத்திமா முசப்பர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், கே.எம்.இலியாஸ் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். மேலும் விழாவில் சிங்கப்பூர் எம்.இலியாஸ் எழுதிய உலக அரங்கில் சிராஜீல் மில்லத் நூல் வெளியிடப்பட்டது. மேலும் இசையரங்கம், கருத்தரங்கம், தலைவர்களின் சொல்லரங்கம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் சமுதாய தலைவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
