×

துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், பசுபதி, அமீர் நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிபெற்றுள்ள படம், ‘பைசன்: காளமாடன்’. இப்படத்தை பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், படக்குழுவினரை அழைத்து பாராட்டினார்.  ‘பைசன்: காளமாடன்’, மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல். தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றிபெற்ற கதையை மிகச்சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார்.

அவரது ஒவ்வொரு படமும் ‘sharp message’யும், தாக்கத்தையும் பதிக்கத் தவறியதே இல்லை. விளையாட்டுத்துறையை மையமாக வைத்து, இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ்.சகோதரர் மாரி செல்வராஜின் திரைமொழியும், கலைநேர்த்தியும், மேலும் மேலும் மேம்பட்டு வருவதற்கு எடுத்துக்காட்டாக ‘பைசன்’ மிளிர்கிறது.

இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, மாரி செல்வராஜின் திரைக்கதைக்கு உயிரூட்டியுள்ள துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட நடிகர்கள், பின்னணியில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! இதுபோல் மேலும் பல படைப்புகளைத் தமிழ்த் திரையுலகுக்கு வழங்க மாரி செல்வராஜுக்கு எனது வாழ்த்துகள்! இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Dhruv Vikram ,Chennai ,Mari Selvaraj ,Pasupathi ,Ameer ,Tamil Nadu ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...