×

தமிழகத்தில் 9 மாதங்களுக்கு பின் டாஸ்மாக் பார் திறப்பு குடிமகன்கள் உற்சாகம்

திருச்சி, டிச.30: தமிழகத்தில் கொரோனாவால் 9 மாதங்களுக்கு பின் டாஸ்மாக் பார்கள் நேற்று திறக்கப்பட்டது. இதனால் குடிமகன்கள் உற்சாகமடைந்தனர். தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை திறக்க பல்வேறு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று தமிழகத்தில் பார்கள் திறக்கப்பட்டது. திருச்சி மாநகர் மாவட்டத்தில் 183 பார்கள் உள்பட டெல்டா மாவட்டங்களில் 413 பார்கள் திறக்கப்பட்டன. முன்னதாக கடந்த 9 மாதங்களாக பூட்டியே கிடந்ததால் குப்பை, ஒட்டடை படிந்து காணப்பட்டதால் பார் ஊழியர்கள் சுத்தம் செய்து பூஜை நடத்தி வியாபாரத்தை துவக்கினர்.

பார்களின் அரசின் விதிமுறைகளின் படி50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் அனைத்து பார்களின் நுழைவு வாயில்களில் சானிடைசர் வைக்கப்பட்டிருந்து. பார்களுக்கு வந்த வாடிக்கையாளர்களின் வெப்ப நிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பார்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பெயர்கள் மற்றும் போன் எண்ணையும் பார் ஒப்பந்ததாரர் பதிவு செய்து வருகின்றனர். கடந்த 9 மாதமாக பார்கள் பூட்டப்பட்டிருந்ததால் கிடைத்த இடங்களில் நின்று மது குடித்த நிலையில், பார்கள் திறக்கப்பட்டதால் குடிமகன்கள் உற்சாகமடைந்தனர்.

Tags : Citizens ,opening ,Tasmac Bar ,Tamil Nadu ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...