×

அஸ்வின்ஸ் கேக் திருவிழா

திருச்சி,டிச.30: ஒவ்வொரு புதிய நிகழ்வும் நமக்கு மகிழ்ச்சியும், எதிர்பார்ப்பும் தரும். ஆங்கில புத்தாண்டு என்றால் நமக்கு நினைவுக்கு வரும் முக்கியமான ஒன்று கேக் ஆகும். ஆண்டுதோறும் கேக் திருவிழா நடத்தும் அஸ்வின்ஸ் கேக் திருவிழா நமக்கு நினைவுக்கு வர, நிறுவனத்தலைவரை சந்தித்தோம். அவர் கூறுகையில், கிறிஸ்துமஸ் விழாவுடன் வருவதால் ஆங்கிலப் புத்தாண்டில் கிறிஸ்துமஸ் கேக் மக்கள் விரும்பி சாப்பிடுவர்.
அதனால் இந்த ஆண்டு நாங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் நியூஇயர் காம்போவை அறிமுகம் செய்துள்ளோம். இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் ஆண்டுதோறும் நடத்தும் கேக் திருவிழாவை இந்த ஆண்டும் எங்கள் அனைத்து கிளைகளிலும் இன்னும் உற்சாகமாக நாங்கள் நடத்த உள்ளோம்.

இந்த விழாவில் பல்வேறு வகையான கேக்குகள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும்வண்ணம் இருக்கும். எங்களது கேக் திருவிழாவிற்கு அனைவரையும் வரவேற்கிறோம். வரும் ஆங்கில புத்தாண்டு நம் அனைவருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டு வந்துள்ளது. 2020ல் இருந்த துன்பங்கள் அனைத்தும் விலகி, நாம் மகிழ்வுடன் இருப்பதை எதிர்நோக்கியுள்ளோம். இனிப்பான கேக் திருவிழா போன்ற பல நல்ல நிகழ்வுடன் வரும் ஆண்டை வரவேற்போம் என்றார். மேலும் வரும் 2021 அனைவருக்கும் நல்லாண்டாக அமைய வாழ்த்துக்களை அஸ்வின்ஸ் நிறுவனம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் என கே.ஆர்.வி.கணேசன் கூறினார்.

Tags : Aswins Cake Festival ,
× RELATED அஸ்வின்ஸ் கேக் திருவிழா பெரம்பலூரில்...