திருச்சி, டிச.30: திருச்சி மாநகராட்சி முன்பாக துப்புரவு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு அரசு அறிவித்த 1 மாத சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். தினக்கூலி ரூ.540 வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் மாநகராட்சி வழங்க மறுப்பதை கண்டித்தும், சம்பளத்துடன் கூடிய வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சிஐடியூ மாவட்ட செயலாளர் ரெங்கராஜ் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.