×

மீனுக்கு வலைவீசும் மீனவர் திருவாரூரில் 7ம்தேதி நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் லட்சம் பேர் பங்கேற்க நடவடிக்கை

திருவாரூர், டிச.30: திருவாரூரில் வரும் 7ம் தேதி நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஒரு லட்சம் பேர்கள் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடுத்த மாதம் 7ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதனையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் சாந்தா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசுகையில், திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவ்வப்போது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமி அடுத்த மாதம் 7ம் தேதி சொரக்குடி பாலிடெக்னிக்கில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2016ம் ஆண்டில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் 756 கம்பெனிகள் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் 57 ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிலையில் 5 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இதேபோன்று தற்போது மாபெரும் முகாம் நடத்த உள்ளதால் இதில் இதுவரையில் 100 கம்பெனிகளை சேர்ந்த நிறுவனங்கள் பதிவு செய்துகொண்டு தங்களுக்கான 18 ஆயிரம் வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இன்னும் நாட்கள் இருப்பதால் மொத்தம் 300 கம்பெனிகள் வரையில் கலந்து கொள்ள உள்ளனர். விவசாய மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 9 ஆயிரத்து 823 மகளிர் குழுக்களுக்கு கடந்த 9ஆண்டு காலத்தில் இதுவரையில் 10 ஆயிரம் கோடி வங்கி கடன் உதவி வழங்கப்பட்டு கந்து வட்டி உட்பட பல்வேறு பிரச்னைகளிலிருந்து அவர்களது குடும்பம் காப்பாற்றப்பட்டு முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுபோன்று வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கான பணியினை முழு ஈடுபாடுடன் செய்திட வேண்டும்.

மேலும் இந்த முகாமில் ஒரு லட்சம் பேர்கள் பங்கு பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் மாவட்டம் முழுவதும் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் உட்பட அனைவரும் தங்களிடத்தில் படித்த மாணவர்களுக்கு தகவலை தெரிவித்து முகாமில் பங்கு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முகாமில் தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு அன்றே பணி ஆணை வழங்கப்படுகிறது. இதில் தொழில்துறை அமைச்சர் உட்பட 5 துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : employment camp ,Thiruvarur ,
× RELATED மாவட்ட கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்