- முதல் அமைச்சர்
- சென்னை
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- கே. ஸ்டாலின்
- சென்னை கார்த்தன்ஜி குடியிருப்பு
- தமிழ்
- தமிழ்நாடு
- திராவிட மேம்பாட்டுக் கழகம்
சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில் இளைஞர் அணி சார்பாக வெளியிடப்பட்டு வரும் முரசொலி நாளிதழ் பாசறைப் பக்கம் 1,000 -வது இதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை குறிஞ்சி இல்லத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களிடம், நேற்று (25.10.2025) முரசொலி நாளிதழில் இளைஞர் அணி சார்பாக வெளியிடப்பட்டு வரும் பாசறைப் பக்கத்தின் 1,000 -வது இதழின் பிரதியை, தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் அணியின் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வழங்கி வாழ்த்து பெற்றார்.
முத்தமிழறிஞர் கலைஞரின் மூத்தபிள்ளையாம் முரசொலியில், இன்றைய இளம் தலைமையினரை ஈர்க்கும் வகையில், தி.மு.கழக இளைஞர் அணியால் உருவாக்கப்பட்ட `பாசறை’ பக்கத்தை தி.மு.கழகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 14.01.2023 அன்று தொடங்கி வைத்தார்.
பாசறைப் பக்கம்- 1,000;
நீதிக்கட்சியில் தொடங்கி தி.மு.க. வரலாற்றை, ஓவியங்களால் விவரிக்கும் `திராவிடத்தால் வாழ்கிறோம்’ , கழக முன்னோடிகளைப் பற்றிய `உடன் பிறப்பே’, கலைஞரோடு நெருங்கிப் பழகியவர்களின் உணர்வுபூர்வமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் `கலைஞரும் நானும்’, திராவிட இயக்கப் பெண்களைப் பற்றிய `திராவிடப் போராளிகள்’, கலைஞர் ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைக்கும் `இடம்-பொருள்-கலைஞர்’, திராவிட மாடல் அரசின் சாதனைகளை உச்சி நுகரும் `திராவிட மாடல் அரசு’, சிறுபான்மையினருடன் கழகத்துக்கு இருக்கும் உறவைப் பற்றிப் பேசும் `மைனாரிட்டி தி.மு.க.’ இடஒதுக்கீடு வரலாற்றினை விவரிக்கும் `எல்லோருக்கும் எல்லாம்’ என 22 தொடர்கள் இதுவரை பாசறைப் பக்கத்தில் வெளியாகி பேராதரவைப் பெற்றுள்ளது.
பேராசிரியர் ஜெயரஞ்சன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், வழக்கறிஞர் அருள்மொழி, கோவி.லெனின், மருத்துவர் எழிலன், வீ.எம்.எஸ். சுபகுணராஜன், எம்.எம்.அப்துல்லா உட்பட 16 பேர் பாசறைப் பக்கத்தில் தொடர்கள் எழுதி உள்ளனர். இயக்க வரலாறு- கொள்கைகள்- சாதனைகள் ஆகியவற்றை இளைஞர்களிடம் கொண்டுசேர்க்கும் பணியைச் சிறப்போடு செய்துவரும் பாசறைப் பக்கம் ஆயிரமாவது நாளை எட்டியுள்ளது.
முதலமைச்சர் வாழ்த்து;
அதையொட்டி, சென்னை குறிஞ்சி இல்லத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலினிடம், இன்று (25.10.2025) முரசொலி நாளிதழில் இளைஞர் அணி சார்பாக வெளியிடப்பட்டு வரும் பாசறைப் பக்கத்தின் 1,000 -வது இதழின் பிரதியை, தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் அணியின் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வழங்கி வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், ப.அப்துல் மாலிக், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், ஜி.பி.ராஜா, அன்பகம் செந்தில், முரசொலி நாளிதழின் பொது மேலாளர் எஸ்.ராஜசேகரன், செய்தி ஆசிரியர் கு.சேது, கட்டுரையாளர்கள் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகர் கோவி.லெனின், மாணவர் அணி துணைச் செயலாளர் கா.அமுதரசன், செய்தி தொடர்புக் குழு துணைச் செயலாளர் மருத்துவர் எஸ்.ஏ.எஸ்.ஹபிசுல்லா, ஓவியர் ரவி பேலட், பாசறை ஆசிரியர் குழுவினர் நீரை.மகேந்திரன், ர.பிரகாசு, கௌதம் ராஜ், சு.கதிரேசன், பா.கோபி ஆகியோர் உடனிருந்தனர்.
