×

நீடாமங்கலத்தில் உயிர் போத்து வேலி அமைக்கும் பணி

நீடாமங்கலம், டிச.30: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக உயிர் போத்து வேலிகள் அமைக்கும் பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தங்கள் வீடுகளையும், விவசாய நிலங்களையும் பாதுகாக்க உயிர்வேலிகளான கிளுவை, ஒதியன், கள்ளி, வாதநாராயணன், கல்யாணமுருங்கை போன்ற போத்துகள் வைத்து வளர்ப்பது தொன்று தொட்டு நடைமுறையில் இருந்தது. இது உயிர் வேலியாக மட்டுமல்லாமல் ஆடு மாடுகளுக்கு தீவன தேவையையும் பூர்த்தி செய்து வந்தது.

மேலும் இதிலிருந்து பெறப்படும் தழைகள் நெல் நடவிற்கு முன் வயலில் பசுந்தாழை உரமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் சமீப காலங்களில் இது முற்றிலும் நடைமுறையில் இல்லாமல் போய் விட்டது. இந்நிலையில் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு 1,500 கிளுவை போத்துகள் நடப்பட்டது. உயிர்வேலியின் முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு முனைவர்கள் அனுராதா, ஜெகதீசன், சபாபதி, கமலசுந்தரி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் எடுத்து கூறினர்.

Tags : Needamangalam ,
× RELATED கோடை நடவு பயிரில் எலிகளை கட்டுப்படுத்த பறவை தாங்கி