மன்னார்குடி அரசு கல்லூரியில் கொரோனா சிறப்பு பரிசோதனை முகாம்

மன்னார்குடி, டிச.30: மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரியில் கோவிட் 19 சிறப்பு பரி சோதனை முகாம் நடைபெற்றது. மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை, இளையோர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் மற்றும் கோவிட் பாதுகாப்பு மையம் இணைந்து கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான கோவிட்19 சிறப்பு முகாம் நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முகாமை கல்லூரி முதல்வர் அறிவுடைநம்பி துவக்கி வைத்தார்.

பேராசிரியர்கள் ரவி, மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில், மன் னார்குடி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் அபூர்வத்தமிழன் தலைமையிலான மருத்துவ மருத்துவக் குழுவினர் கொரோனா பரிசோதனைக்காக 101 பேராசிரியர் களுக் கும், 150 முதுநிலை இறுதியாண்டு மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்களுக்கு சளி மாதிரி எடுத்தனர். முகாமில் என்எஸ்எஸ் அலுவலர்கள் சத்தியாதேவி, ஆகாஷ், ஜென்னி, ராஜ் குமார், இளையோர் செஞ்சிலுவை சங்க கல்லூரி ஒருங்கிணைப்பாளர் மகேஷ், செஞ்சுருள் சங்கம் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக என்சிசி அலுவலர் ராஜன் வரவேற்றார். என்எஸ்எஸ் அலுவலர் பிரபாகரன் நன்றி கூறினார்.

Related Stories:

>