தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் பேச்சு 18 வயது பூர்த்தியடைந்த, மாற்றுத்திறனாளி வாக்காளரை விடுபடாமல் சேர்க்க வேண்டும்

தஞ்சை, டிச. 30: தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் கோவிந்தராவ் முன்னிலை வகித்தார். மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சண்முகம் தலைமை வகித்து பேசுகையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் அலுவலர்கள், உதவி வாக்காளர் பட்டியல் அலுவலர்கள், கள பணியாளர்கள் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு சுருக்கமுறை குறித்து கூடுதலாக மேலாய்வு செய்ய வேண்டும்.

இறப்பு குறித்து பதிவேற்றம் செய்யப்படும் விவரங்களை முழுமையாக ஆய்வு செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். புதிய வாக்காளர்கள் சேர்ப்பதற்கு அதிகளவில் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் தனி கவனம் செலுத்தி கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். புதிய வாக்காளர் சேர்ப்பதற்கான படிவங்களை வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டு சேர்க்க வேண்டும்.

20 வயதுக்கு மேற்பட்டோர் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கு மனு அளிப்பின் அவர்கள் முன்பு சேர்க்கப்படவில்லை என்பதை உறுதி செய்தபின் அவர்களுடைய மனுவை பரிசீலிக்க வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 18 வயது பூர்த்தியடைந்த மற்றும் மாற்றுதிறனாளி வாக்காளர்கள் அனைவரையும் விடுபடாமல் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், தஞ்சை ஆர்டிஓ வேலுமணி, கும்பகோணம் ஆர்டிஓ விஜயன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். முன்னதாக சிறப்பு சுருக்க திருத்த முறை முகாமின்போது பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து திருவையாறு விளாங்குடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகிய பணிகள் குறித்து கள பணியாளர்களிடம் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் சண்முகம் கேட்டறிந்தார்.

Related Stories:

>