×

அதிகாரிகளுக்கு உத்தரவு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு விளாங்குடி சோதனைச்சாவடியில் இன்று நடக்கவிருந்த உண்ணாவிரதம் ஒத்தி வைப்பு


திருவையாறு, டிச. 30: திருவையாறு தாலுகா விளாங்குடியில் இருந்து செம்மங்குடி வரை உள்ள தார்ச்சாலைகளில் குடிநீர் குழாய் அமைக்கப்படுகிறது. இதனால் சாலைகள் சேதமடைந்து வருவதால் வீரமாங்குடி, ஏலாக்குறிச்சி இடையே கொள்ளிடம் ஆற்றில் போக்குவரத்துடன் கூடிய கதவணை அமைக்க வலியுறுத்தி விளாங்குடி சோதனைச்சாவடியில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த மக்கள் முடிவு செய்திருந்தனர். இதைதொடர்ந்து திருவையாறு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் தாசில்தார் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்தது. தஞ்சை மாநகராட்சி பார்வை பொறியாளர் விஜயகுமார், மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், திருவையாறு சப்இன்ஸ்பெக்டர் ஞானமுருகன் மற்றும் கிராம மக்கள் சார்பில் ராமலிங்கம், ஊராட்சி தலைவர் கதிர்காமு, பாரதிதாசன், செல்வராஜ், கோவிந்தராஜ், சம்மந்தம், மணிகண்டன் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வில்லியநல்லூர் ராமலிங்கம் பேசும்போது: விளாங்குடி அணைக்குடி இடையே உள்ள நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் புதைக்கப்பட்டு வருவதால் சாலைகள் சேதமடைந்துள்ளது. இதனால் போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது என்றனர். தஞ்சை மாநகராட்சி பார்வை பொறியாளர் விஜயகுமார் பேசும்போது, வைரவன்கோவில், அணைக்குடி மற்றும் பெரமூர், ஒக்கக்குடி, செம்மங்குடி, விளாங்குடி ஆகிய கிராமங்களில் குடிநீர் குழாய்கள் புதைக்கப்பட்ட சாலைகளை 10 நாட்களுக்குள் சரி செய்யப்படும் என்றார்.

அப்போது வில்லியநல்லூர், விளாங்குடி, ஒகக்குடி, செம்மங்குடி, அணைக்குடி ஆகிய கிராம மக்கள் பேசும்போது, திருமழபாடி- வீரமாங்குடி இடையே கொள்ளிடம் ஆற்றில் எந்த ஆழ்குழாய் கிணறும் அமைக்கக்கூடாது. அப்படி அமைத்தால் வீரமாங்குடி-ஏலாக்குறிச்சி இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்க வேண்டும். இதுதொடர்பாக தஞ்சை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்றனர்.
திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன் பேசும்போது, கதவணை அமைப்பது தொடர்பாக கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த தஞ்சை வருவாய் கோட்ட அலுவலருக்கு கடித வரைவு அனுப்பப்படும் என்றார். இதனால் இன்று (30ம் தேதி) நடக்கவிருந்த உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

Tags : check post ,Vilangudi ,
× RELATED உண்ணாவிரதத்தை கைவிட்ட கைதி