×

3 நாட்கள் நடக்கிறது புகழூர் நகராட்சி சிறப்பு கூட்டம்

வேலாயுதம்பாளையம், அக். 26: புகழூர் நகராட்சி ஆணையாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழக அரசின் உத்தரவின்படியும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவின்படியும் கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதிகளில் வரும் அக்டோபர் 27, 1-வது வார்டு முதல் 8 வார்டு வரையிலும், வரும் 28ம் தேதி, 9-வது வார்டு முதல் 16-வது வார்டு வரையிலும், வரும் 29ம் தேதி அன்று 17வது வார்டு முதல் 24 -வது வார்டுகளில் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர்கள் தலைமையில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டங்கள் நடைபெற உள்ளது.

தொடர்ந்துகூட்டத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்கா, மழைநீர் வடிகால் பராமரிப்பு ஆகியவற்றில் நிலவும் சேவை குறைபாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கலாம். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பூங்காக்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கம் மூலம் பராமரிப்பு செய்வது குறித்தும் விவாதிக்கலாம், பள்ளிகளில் செயல்பட்டு வரும் தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்தும் முறைகள் பற்றியும் விவாதிக்கலாம் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாய்ப்பினை அந்தந்த வார்டுகளில் உள்ள பொதுமக்கள் மேற் குறிப்பிட்ட நாளில் நடைபெற உள்ள வார்டு அளவிலான சிறப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு புகழூர் நகராட்சி ஆணையாளர்( பொறுப்பு) நந்தகுமார் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Tags : Pugazhur Municipality ,Velayudhampalayam ,Pugazhur ,Municipal Commissioner ,Nandakumar ,Tamil Nadu government ,Principal Secretary ,Municipal Administration and ,Water Supply Department ,Karur district ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...