புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை, டிச.30: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தின் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 11,394 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தோரில் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 11,188ஆக உயர்ந்துள்ளது. புதிய உயிரிழப்பு இல்லை. இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 155ஆக தொடர்கிறது. இந்நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை நேற்று நிலவரப்படி 51ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>