×

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி செயலாக்க பயிற்சி முகாம்

பொன்னமராவதி,டிச.30: பொன்னமராவதியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி செயலாக்க பயிற்சி முகாம் நடந்தது. இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பங்கேற்றனர். பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித்துறை சார்பாக ஆட்சிமொழி செயலாக்க பயிற்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) வேலு தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். முத்தமிழ்ப்பாசறை தலைவர் சந்திரன், தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராசன் ஆட்சி மொழி சட்டம் குறித்து அலுவலக கோப்புகள், ஆணைகளில் தமிழ் மட்டுமே இடம்பெற வேண்டும். பதிவேடுகளில் தமிழில் தான் கையொப்பம் இடவேண்டும் என்பது உட்பட பல பயிற்சியை வழங்கினர். இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Language Processing Training Camp ,Tamil Development Department ,
× RELATED கனவு இல்ல திட்டத்தின் கீழ் 10...