×

பெரம்பலூர் மாவட்டத்தில் மழையால் பாதித்த பயிர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தல்

பெரம்பலூர்,டிச.30:பெரம்ப லூர் மாவட்டத்தில் மழையால் பாதித்த சின்ன வெங் காயம், மக்காச்சோள, பருத்தி பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி உள்ளது. பெரம்பலூரில் கொங்கு நாடு மக்கள்தேசியக் கட்சி யின் மாவட்டச் செயற்குழு கூட்டம் நேற்று பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கொங்கு சிவா தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் பெரம்பலூர் கலைச்செல்வன், வேப்பந்தட்டை குழந்தைவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரகதீஷ், மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனிவேல் கலந்துகொண்டு சிறப்புரை பேசினார்.

கூட்டத்தில், 2010ம் ஆண் டு அடிக்கல் நாட்டி கிடப்பில் போடப்பட்டுள்ள பெரம்பலூ ர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையை விரைந்து தொடங்க வேண்டும். பெரம்பலூரில் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் புதிய எரிவாயு தகனமேடை உடனடியாக அமைத்து தர வேண்டும். மாவட்டத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்தி தண் ணீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். விசுவக்குடி அணை நீரை விவசாயிகள் பயன்பெறும் வகையில் பா சன வாய்க்கால் அமைத்து தர வேண்டும். தாலுகா தலைநகரமான வேப்பந்தட் டையில் பேருந்து நிலையம் அமைத்துத் தரவேண்டும். வேப்பந்தட்டையில் அரசு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பயன்பாட்டிற்காக பப்ளிக் டாய்லெட் பாத்ரூம்வசதி அமைத்துத் தர வேண்டும். மாவட்டத்தில் அதிகமாக பயிரிடப்பட்டு மழையால் பாதித்துள்ள சின்னவெங்காயம், மக்கா ச்சோள, பருத்திப் பயிர் சாகுபடியாளர்களுக்கு மாவட்டநிர்வாகம் விரைந்து இழ ப்பீட்டுத் தொகையினை பெற்றுத்தர வேண்டும் என் பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kongunadu People's National Party ,Perambalur district ,
× RELATED மோடியை ஆதரித்தால் அதிமுக என்ற கட்சியே இருக்காது: ஈஸ்வரன்