×

பெரம்பலூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு

பெரம்பலூர்,டிச.30:பெரம்பலூரில் 3,648 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்கட்டமாக சரிபார்க்கும் பணிகளை பெரம்பலூர் சப்-கலெக்டர் பத்மஜா தொ டங்கிவைத்து பார்வையிட் டார்.
தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, தமிழக தலை மைத் தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாஹூ உத் தரவின் பெரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து மாவட்டங்களிலும் சரிபார்க்கும் பணி 29ம்தேதி முதல் 31ம் தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட சரிபார்க்கும் பணிகள் பெரம்பலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த தேர் தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களோடு, மஹாராஷ்டிரா மாநிலம், வர்தா மாவட்டத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என ஸ்ட்ராங் ரூ மில் போலீஸ் பாதுகாப்பு டன் வைக்கப் பட்டிருந்த 1,072 கண்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள், 1414 பேலட் யூனிட்டுகள், 1162 வி.வி பேட் மெஷின்கள்என 3,648 இயந்திரங்கள் முதல்கட்ட மாக சரிபார்க்கும் பணிகள் நேற்று தொடங்கியது. வரும் 31ம் தேதிவரை நடைபெறும் இந்தப்பணிகளை அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் செந்தி ல்நாதன் (திமுக), ரஞ்சித்குமார் (அதிமுக), ஞானசேகரன் (சிபிஐ), காமராசு (பிஎ ஸ்பி), குணசேகரன் (தேசிய வாத காங்) ஆகியோர் முன்னிலையில் பெரம்பலூர் சப்-கலெக்டர் பத்மஜா தொடங்கிவைத்து பார்வையிட் டார்.

இதனைத் தொடர்ந்து நாளொன்றுக்கு 300 இயந்திரங்கள் பெங்களூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர்களால் சரிபார்க்கப்பட்டு, அதில் தகுதியாக உள்ள இயந்திரங்களுக்கு கிரீன் ஸ்டிக்கரும், தகுதியற்ற இயந்திரங்களுக்கு ரெட் ஸ்டி க்கரும் ஒட்டி மேற்பார்வையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் கையெழுத்து இடும்பணிகள் நடந்துவருகிறது.நிகழ்ச்சியின்போது, சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாரதிவளவன், தேர்தல் தனி தாசில்தார் துரைராஜ், பெரம்பலூர் தாசில்தார் அருளானந்தம், வேப்பந்தட்டை தாலுகா சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார் மாயக்கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். பெரம்பலூர் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...