×

சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பான கலந்தாய்வு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது

நாகை, டிச.30: நாகையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆர்டிஓ பழனிகுமார் தலைமை வகித்தார். இதில் நாகையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், நகராட்சி அலுவலர்கள், வட்ட துணை ஆய்வாளர்கள், தலைமை உதவியாளர்கள் , மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சமூக ஆர்வலர் சித்திக் கூறியதாவது: 2019ம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையினால் ஏரி, குளங்கள், குட்டைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் 35 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. 28 இடங்களில் நீர் மட்டம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மாவட்டத்தில் வைத்தீஸ்வரன் கோயில், திருவாளபத்தூர், மயிலாடுதுறை, மங்கை நல்லூர்,  கண்டபுரம், கீழை யூர், பண்டாரவாடை, பட் டவர்த்தி, சீர்காழி, வேட்டைகாரனிருப்பு, ஈச்சங்குடி, நரசிங்கமங்கலம் என பல இடங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள் ளது. நாகை நகர எல்லையில் பெரும்பாலான குளங்கள் ஆக்கிரமிப்பின் காரணமாக காணாமல் போய்விட்டது. இதனால் சாலைகளில் தண்ணீர் வழிந்தோடுவதால் சாலை சேதம் அடைகிறது. எனவே நீர்வரத்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதுடன் இனிவரும் காலங்களில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும் என்று கூறினார். இதை தொடர்ந்து நாகை நகர எல்லையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆவணம் செய்வதாக கூறப்பட்டது.

Tags : consultation ,removal ,office ,Kottayam ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...