×

சட்டமன்ற தேர்தலில் நாகை தொகுதி முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்

நாகை, டிச.30: சட்டமன்ற தேர்தலில் நாகை சட்டமன்ற தொகுதி முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கூட்டணி கட்சிக்கு வலியுறுத்தி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம் நாகூரில் நடந்தது. நாகை மாவட்ட தலைவர் செய்யது அலி மரைக்காயர் தலைமை வகித்தார். மாவட்ட கவுரவ தலைவர் சம்சுதீன், செயலாளர் அன்வர் பாட்சா, மாவட்ட துணை தலைவர் ஜெய்னுலாபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முஸ்லிம் யூத் லீக் துணை தலைவர் ஹபிபுல்லா, ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி ஆகியோர் பேசினர். இந்திய திருநாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்த சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும்.

எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தலைமையிடம் நாகை தொகுதியை கேட்டு பெற முஸ்லிம் லீக் மாநில தலைமைக்கு வலியுறுத்துவது. நாகூர் நகர் முழுவதும் கழிவுநீர் ஓடைகளில் கழிவுநீர் தேங்கி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் செல்லும் பாதையை சீர்படுத்தி நோய் பரவுவதை தடுக்கும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை கலெக்டர் அலுவலகம் மற்றும் நாகை நகராட்சிக்கு மனு அளிப்பது. சில ஆண்டுகளாக இடைநிறுத்தம் செய்யப்பட்ட நாகூர்-கொல்லம் ரயில் சேவையை மீண்டும் தொடங்கிட வேண்டும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் மனு கொடுப்பது. நாகூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகமாக பஸ்களை இயக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஜான் செய்யது மீரான் நன்றி கூறினார்.

Tags : constituency ,Naga ,party ,elections ,Muslim League ,Assembly ,
× RELATED நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள்...