கோடியக்காடு பகுதியில் திமுக பொதுஉறுப்பினர்கள் கூட்டம்

வேதாரண்யம், டிச.30: வேதாரண்யம் சட்ட மன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் கோடியக்காடு ஊராட்சி தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம் தனியார் திருமண அரங்கில் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தி.மு.கழக தீர்மானக்குழு உறுப்பினர் மற்றும் சட்ட பேரவை முன்னாள் உறுப்பினர் காமராஜ், தலைமை கழக வழக்கறிஞர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் மறைமலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் செந்தாமரைச்செல்வன், இளையசூரியன் உதயநிதி ஸ்டாலின் மலேசியா பேரவை சம்பத் மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக செயலாளர் கள், முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>