×

முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் மனு கரூரில் குறைந்த அளவே பார்கள் செயல்பட்டன

கரூர், டிச. 30: கரூரில் நேற்று குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் பார்கள் செயல்பட்டன. கொரனோ பரவலை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும், கடைகளின் அருகில் செயல்பட்டு வந்த பார்களும் மூடப்பட்டன. கொரனோ பரவல் குறைந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு டாஸ்மாக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. பார்கள் திறக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் பாதுகாப்பு அம்சங்களுடன் பார்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. கரூர் மாவட்டத்தில் 92 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இதில், 64 கடைகளில் அருகே பார்கள் செயல்பட்டு வந்தன. தற்போது பார்கள் திறக்க உத்தரவிட்டுள்ளதால், நேற்று குறிப்பிட்ட அளவில்தான் பார்கள் திறந்திருந்தன. பெரும்பாலான பணியாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்ற காரணத்தினால், ஜனவரி 1ம்தேதி முதல் அனைத்து பார்களும் திறக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர், டிச. 30: வாக்காளர் பட்டியல் பார்வையாளர் இன்று கரூர் வருகிறார். இது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கரூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2021 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிவசண்முகராஜா, கரூர் மாவட்டத்திற்கு இன்று( 30ம்தேதி) வருகிறார்..
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்தல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட படிவங்களை உரிய முறையில் தீர்வு காண்பது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மதியம் 3மணிக்கு மாவட்ட தேர்தல் அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Barbers ,Manu Karur ,
× RELATED முடி திருத்துவோர் சங்கம் சார்பில்...