×

தேவதானப்பட்டி அருகே மக்கள் கிராமசபைக் கூட்டம்

தேவதானப்பட்டி, டிச 30: தேவதானப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி மற்றும் கெங்குவார்பட்டியில் திமுக சார்பில் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்னும் மக்கள் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எல்.மூக்கையா தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அருணாசேகர் முன்னிலை வகித்தார். கெங்குவார்பட்டி பேரூர் செயலாளர் தமிழன், பொம்மிநாயக்கன்பட்டி திமுக ஊராட்சி செயலாளர் சாகுல்ஹமீது, வடுகபட்டி பேரூர் பொருப்பாளர் காசிவிஸ்வநாதன், மாவட்ட பிரதிநிதி ராஜாராம், மாடசாமி, ஒன்றியக் கவுன்சிலர் தங்கவேல், ஒன்றிய கழக தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் உதயா, பேரூராட்சி, ஊராட்சி கிளைச் செயலாளர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றி பொதுமக்கள் அனைவரும் பதாகையில் கையொப்பமிட்டனர்.

Tags : village council meeting ,Devadanapatti ,
× RELATED மனைவி பணம் தராததால் விவசாயி தற்கொலை