×

திமுக நடத்திய கிரிக்கெட் போட்டி சிங்கம்புணரி அணி முதலிடம்

சிங்கம்புணரி, டிச.30:  சிங்கம்புணரி ஒன்றிய நகர திமுக சார்பாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியில் மதுரை, திருச்சி,புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 24 அணிகள் கலந்துகொண்டன.
சிங்கம்புணரி கண்ணன் நினைவு குழு அணியினர் முதல் பரிசும், கானாடுகாத்தான் அணியினர் இரண்டாம் பரிசும், காளையார்கோவில் அணியினர் மூன்றாம் பரிசும், சிங்கை ராவன்ஸ் அணியினர் நான்காம் பரிசும் பெற்றனர்.
வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளையும் கோப்பைகளையும் பெரியகருப்பன் எம்எல்ஏ  வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் பூமிநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் அம்பலமுத்து, சோமசுந்தரம், நகர செயலாளர் யாகூப் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Tags : team ,Singampunari ,cricket match ,DMK ,
× RELATED வாக்குச்சாவடிக்குள் வலிப்பு வந்து...