×

கபடி வீராங்கனை கார்த்திகா மற்றும் அபினேஷ்க்கு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தந்துள்ள கார்த்திகா மற்றும் அபினேஷ்க்கு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் இந்திய கபடி அணி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றது அறிந்து மகிழ்ந்தோம். ஆண்கள் அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகாவும், ஆண்கள் அணியில் அபினேஷ் மோகன்தாஸும் இடம் பெற்றிருந்தது நமக்கெல்லாம் பெருமை. அபினேஷ் தேனியில் உள்ள நமது எஸ்டிஏடி விடுதியில் தங்கி பயிற்சி எடுத்தவர் என்பதும், கார்த்திகா எளிய பின்புலத்தில் இருந்து புறப்பட்டு இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் என்பதும் கூடுதல் சிறப்பு. சர்வதேச அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்துள்ள கார்த்திகா மற்றும் அபினேஷை வாழ்த்தி மகிழ்கிறோம். இவர்கள் இருவரும் மென்மேலும் பல வெற்றிகளை குவிக்கட்டும்.இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Kabaddi ,Karthika ,Abinesh ,Chennai ,XSala ,Asian Youth Games ,Bahrain… ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!