புத்தாண்டை வரவேற்க மாணவர்கள் சாதனை முயற்சி

காரைக்குடி, டிச.30:  காரைக்குடி பூதக்கண்ணாடி கல்வி மையம் மற்றும் ரோட்டரி பியர்ல்ஸ் சங்கமம் சார்பில், தமிழ் இலக்கியங்களோடு புத்தாண்டை வரவேற்போம் என்ற நிகழ்ச்சி நடந்தது. கல்வி மைய இயக்குநர் செயம்கொண்டான் வரவேற்றார். ரோட்டரி தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். வள்ளுவர் பேரவை செயலாளர் பிரகாஷ் மணிமாறன் முன்னிலை வகித்தார். இதில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக 21 மாணவர்கள் 21 நிமிடங்களில் 21 மீட்டர் வெள்ளை தாளில் 1,330 திருக்குறளை எழுதி சாதனை முயற்சி மேற்கொண்டனர். முன்னாள் துணை ஆளுநர் காரைமுத்துக்குமார், தொழிலதிபர் சுபம் தியாகராஜன், வள்ளுவர் பேரசை ஆலோசகர் முத்துக்குமார் ஆகியோர் பரிசு வழங்கினர்.

நேஷனல் கேட்டரிங் கல்லூரி தாளாளர் சையது உள்பட பலர் கலந்து கொண்டனர். திருக்குறள்செல்வி மாதரசி நன்றி கூறினார்.

Related Stories:

>