காங்கிரஸ் நிறுவன நாள் கொண்டாட்டம்

பரமக்குடி, டிச.30:  பரமக்குடி நகர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக 136வது நிறுவன நாள் நிகழ்ச்சி மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. பரமக்குடி நகர காங்கிரஸ் கட்சியின் சார்பாக எமனேஸ்வரம் பகுதியில் காங்கிரஸ் கட்சி தொடங்கி 136வது நிறுவனம் நாள் கொண்டாடப்பட்டது. நகர் தலைவர் அப்துல் அஜீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தேவேந்திரன் கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். பின்னர் எமனேஸ்வரத்திலிருந்து காங்கிரஸ் கட்சியின் ஊர்வலமாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அகில இந்திய காங். உறுப்பினர் செந்தாமரைக்கண்ணன், இளைஞரணி மாவட்ட தலைவர் சரவணன் காந்தி, மாநில நெசவாளர் அணி தலைவர் கோதண்டராமன், முன்னாள் நகர் தலைவர் மகாதேவன் மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மூத்த காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

Related Stories:

>