மேலூர் அருகே நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க முயற்சி மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

மேலூர், டிச. 30: மேலூர் அருகே கேசம்பட்டியை சேர்ந்தவர் அழகன். விவசாயியான இவருக்கு சொந்தமான இடத்தில் ஐஓசி நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்க கடந்த வாரம் அவரை அணுகி உள்ளது. சட்டப்படி உரிய அனுமதி பெறவில்லை எனக்கூறி அதற்கு அழகன் அப்போது மறுத்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் வெளியூர் சென்றிருந்த வேளையில் திடீரென மேலவளவு போலீஸ் பாதுகாப்புடன் வாழை தோட்டத்தை அழித்து எரிவாயு குழாய் பதிக்க அந்நிறுவனம் முயன்றது. இதற்கு அவரது உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, போலீசை வைத்து மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மதுரை மாவட்ட எரிகாற்று குழாய் எதிர்ப்பு கூட்டமைப்பினர் அந்த இடத்தில் கூடி குழாய் பதிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குழாய் பதிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பூர் ஊராட்சியில் உள்ள அலங்கம்பட்டியில் எரிவாயு பதிக்க ஐஓசி முயன்ற போது கிராமமக்கள் எதிர்ப்பால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>