×

காட்டூர் பழவேற்காடு சாலையில் ஆரணியாற்றை கடப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது

 

திருவள்ளூர்: பொன்னேரி அருகே ஆண்டார்மடம் தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் 4700 கன அடியாக அதிகரித்ததால் காட்டூர் பழவேற்காடு சாலையில் ஆரணியாற்றை கடப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. தடுப்பு கட்டைகள் அமைத்து போக்குவரத்தை தடை செய்த அதிகாரிகள். போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் 10 கிமீ சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதி. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம் என புகார் எழுந்துள்ளது. வாக்கு கேட்டு வந்தவர்கள் யாரும் தற்போது வரவில்லை என குற்றச்சாட்டு. நிரந்தர மேம்பாலம் ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Araniyathu ,Kattur Primitive Road ,Thiruvallur ,Andarmadam Dam ,Bonneri ,Araniyat ,Kattur Priory Road ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...