மதுரை, டிச. 30: மதுரை நரிமேடு பகுதியில் நேற்று நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு திமுக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எஸ்ஸார் கோபி, வேலுசாமி, பொன்.சேதுராமன், தமிழரசி தலைமை வகித்தனர். வட்டச்செயலாளர் ஆபீத் வரவேற்றார். பகுதிச்செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், அக்ரிகணேசன், துணைச்செயலாளர் ரத்தினவேல், பொறியாளர் அணி அமைப்பாளர் சாகுல்ஹமீது முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள், ‘குடிநீர் இல்லை. சாலை மோசமாக உள்ளது. ரேசன் அரிசி சரியில்லை. கொரோனா காலத்தில் ரூ.1000 கொடுத்து விட்டு, மறுவாரமே மதுக்கடைகளை திறந்து விட்டனர்’ என அதிமுக ஆட்சி மீது சரமாரி குற்றம்சாட்டினர்.தொடர்ந்து, மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம் பேசுகையில், ‘அதிமுக ஆட்சியில் கான்டிராக்ட் விட்டு லட்சோபலட்சம் ேகாடி கொள்ளையடிக்கிறார்கள். குடிக்க தண்ணீர் இல்லை. ஆனால் டாஸ்மாக்கை திறந்து விட்டனர். அந்தளவுக்கு மோசமான ஆட்சி நடக்கிறது. 10 ஆண்டுகால ஆட்சி மாற திமுகவுக்கு வாக்களித்து, ஸ்டாலினை முதல்வராக்குங்கள்’ என்றார்.