வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

திண்டுக்கல், டிச. 36: திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் தலைமை வகித்தார். நகர் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் ஓட்டலில் உபயோகப்படுத்தும் எண்ணெயை வெளியே கொடுத்தால், சாலையோர கடைகளில் அந்த எண்ணெயை வைத்து பலகாரங்கள் செய்கின்றனர். இதனால், கேன்சர் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்களை ஆனந்தா ஆயில் கார்ப்பரேஷனில் விற்றுவிடுங்கள் என அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் ஆனந்த ஆயில் கார்ப்பரேஷன் ரெக்யூட்மெண்ட் மேனேஜர் முனிராஜ், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரமோகன், ஜாபர் சேட், கண்ணன், செல்லத்துரை மற்றும் ஓட்டல், பேக்கரி, டீ கடை உரிமையாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>