×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் தர்ணா

கொடைக்கானல், டிச. 30: கொடைக்கானல் நகராட்சியில் நிரந்தரம் மற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்கள் நேற்று காலை மூஞ்சிக்கல் பகுதியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை இல்லை. போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஏரியை தூய்மைப்படுத்த கட்டாயப்படுத்துதல், பணியிடங்களுக்கு செல்ல வாகன வசதி இல்லை. உரிய நேரத்தில் சம்பளம் இல்லை. தீபாவளிக்கு முன்பணம் இல்லை. தூய்மைப் பணி ஆய்வாளர், பணியாளர்களை அவதூறாக பேசுகிறார் என சரமாரியாக குற்றம்சாட்டினர். அவர்களுடன் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மூஞ்சிக்கல் பகுதியில் இருந்து கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் வந்த பணியாளர்கள், பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்துகின்றனர். காலை தொடங்கிய போராட்டம் மதியம் வரை நீடித்தது. பின் நகராட்சி அலுவலகத்தில், ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தூய்மைப் பணி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு திரும்பினர்.

Tags : Darna ,administration ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு சீர்...