ஜன.3ம்தேதி முதல்வர் கயத்தாறு வருகை கட்டபொம்மன் மணிமண்டபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு

கயத்தாறு, டிச. 30: 3ம் தேதி கயத்தாறுக்கு முதல்வர் வருகையையொட்டி கயத்தாறிலுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு மேற்கொண்டார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 3,4ம்தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அந்த 2 நாட்களும் பல துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள், சிறுகுறு வணிகர்கள், விவசாய தொழிலாளர்கள், மருத்துவ ஊழியர்கள் என அனைவருடனும் கலந்துரையாடுகிறார். முதல் நிகழ்ச்சியாக வருகிற 3ம்தேதி, சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை முன்னிட்டு கயத்தாறில் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

அதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்வதற்காக மணிமண்டபத்தில் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ நேற்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சின்னப் பன் எம்எல்ஏ, கலெக்டர் செந்தில்ராஜ், கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜோதிபாஸ், மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் வினோபாஜி, மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் செல்வகுமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், வடக்கு மாவட்ட விவசாயப் பிரிவு இணைச் செயலாளர் மாரியப்பன், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் முருகேசன், மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் கண்ணன், எம்ஜிஆர் இளைஞரணி நகர செயலாளர் தங்கபாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>