- கூடங்குளம்
- இராதாபுரம் நீதிமன்றம்
- சுபா. உதயகுமார்
- குடாங்குளம் அணு மின் நிலையம்
- நெல்லை
- குடன்குளம் அணுக்கரு
- பவர்
- ஆலை
கூடங்குளம்: நீண்ட காலமாக வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய சுப.உதயகுமார் உள்பட 44 பேரை விடுதலை செய்து ராதாபுரம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு சுப.உதயகுமார் தலைமையில் 44 பேர் கூடங்குளம் ஊராட்சியை சேர்ந்த எஸ்.எஸ்.புரம் விலக்கில் பெரிய பாறாங்கற்களை கொண்டு சாலையை வழிமறித்து போக்குவரத்தை தடை செய்தும், கைகளில் கற்களை வைத்து கொண்டு போலீசார் ஊருக்குள் வரக்கூடாது என்று தடுத்து நிறுத்தியதாகவும், போலீசாரை அவதூறாக பேசி ரோந்து பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாகவும் கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு 2014ம் ஆண்டு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தற்போது வரை நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவ்வழக்கு ராதாபுரம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் குபேர சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் சுப.உதயகுமார் உள்பட பலர் விசாரணைக்கு ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறை அறிக்கையின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கு என்ற சூழ்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ச்சியாக நிலுவையில் இருந்து வருகிறது என்பது தெளிவாக ெதரிகிறது. எனவே குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 258ன் படி 44 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
