×

புத்தாண்டை முன்னிட்டு வனத்திருப்பதி கோயிலில் சிறப்பு வழிபாடு

திருச்செந்தூர், டிச. 30: வனத்திருப்பதியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி நாளை மறுநாள் (ஜன.1ம்தேதி) ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு குரும்பூர் அருகே வனத்திருப்பதி புன்னை நிவாச பெருமாள் ஆதிநாராயணர் சிவனணைந்த பெருமாள் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறப்பு, கோபூஜையை தொடர்ந்து மூலவர் திருமஞ்சனம். 5.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது.

காலை 7 மணிக்கு சகஸ்கரநாம அர்ச்சனை, 8 மணிக்கு காலசந்தி பூஜை, திருவாதரனம், சாத்துமுறை கோஷ்டி, பகல் 11.30 மணிக்கு உச்சி கால பூஜையும், மாலை 5 மணிக்கு சகஸ்கரநாம அர்ச்சனையும், 6 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டுகாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு இனிப்பு ரவாகேசரி பிரசாதம் வழங்கப்படுகிறது. விழாக்கான ஏற்பாடுகளை வனத்திருப்பதி கோயில் நிறுவனர் மற்றும் நிர்வாக கையங்கர்யதாரர் ராஜகோபாலின் மகன்கள் சிவக்குமார், சரவணனின் உத்தரவின் பேரில் கோயில் மேலாளர் வசந்தன் செய்து வருகிறார்.

Tags : Vanathirupathi Temple ,New Year's Eve ,
× RELATED மராட்டியம்: மராத்தியர்களின் புத்தாண்டான குடி பத்வா கோலாகல கொண்டாட்டம்