×

கடையை உடைத்து அத்துமீறியை கண்டித்து உடன்குடியில் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம்

உடன்குடி, டிச. 30: உடன்குடியில் கடையை உடைத்து அத்துமீறியதை கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைப்பு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடன்குடியைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் கிருஷ்ணவேல். இவர் கீழபஜாரில் பிரேம் ஒர்க்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த கடை அமைந்துள்ள இடம் காங்கிரசுக்கு சொந்தமானது எனக்கூறி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியினர் கடையை உடைத்து அத்துமீறி உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களை வெளியே அள்ளிபோட்டனர். நேற்று அங்கு காங்கிரஸ் அலுவலகம் திறக்கப்பட்டது.

இதுகுறித்து கிருஷ்ணவேல் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவர் வெற்றிவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், கிறிஸ்தியாநகரம் பிரமுகர் ஜெபராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குள் அத்துமீறி நுழைந்ததை கண்டித்து நேற்று உடன்குடி வியாபாரிகள் சங்கம் சார்பில் மெயின் பஜார், நான்கு பஜார் வீதிகளிலுள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதையடுத்து வியாபாரி சங்க தலைவர் ரவி தலைமையில் சங்க செயலாளர் வேல்ராஜ், பொருளாளர் சுந்தர், துணைத்தலைவர் ஷேக்முகமது, துணைச்செயலாளர் ராஜா, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மந்திரம், அப்துல்காதர் உட்பட ஏராளமான வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட்னர்.

Tags : Demonstration ,shop ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி