×

4 சக்கர வாகனங்களில் கூடுதலாக பொருத்திய பம்பர்கள் அகற்றம்

நெல்லை, டிச. 30:  வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது சென்சார் உடனடியாக வேலை ெசய்து காற்று பைகள் விரிவடைந்து வாகன ஓட்டிகளின் உயிரை காக்கும் வகையில் செயல்படும். ஆனால் கார், இலகுரக வாகனங்களில் பம்பர் பொருத்தப்பட்டு உள்ளதால் விபத்தின் போது சென்சார் வேலை செய்யாமல் உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் வாகனங்களின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பம்பர்கள் எதிர்வரும் வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் பதம் பார்க்கும் வகையில் உள்ளதால் விபத்து ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கார்கள், இலகுரக வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை அகற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் கங்கைகொண்டான் போலீஸ் சோதனை சாவடிகளில் நெல்லை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் 20 கனரக வாகனங்களை சோதனையிட்டு தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்தனர்.  நேற்றிரவு  பாளை வஉசி விளையாட்டு மைதானம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான மோட்டார் ஆய்வாளர் பர்வீன்பாத்திமா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தாமரைகண்ணன் மற்றும் போலீசார் கூடுதல் பம்பர் பொருத்தப்பட்ட 8 நான்கு சக்கர வாகனங்களை சோதனையிட்டு, பம்பர்களை அகற்றினர்.
இனிமேல் வாகனங்கள் முன்பு பம்பர் பொருத்தக்கூடாது எனவும், வரும் ஜன.1ம் தேதி அரசு நிர்ணயிக்கும் அபராத கட்டணம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தினர்.

Tags : Removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...