×

வங்கக் கடலில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: இந்திய வானிலை மையம்

டெல்லி: வங்கக் கடலில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. மேலும் தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையும். தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும்.

வலுப்பெற இருந்த அமைப்பும் வலு குறைந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தற்போது நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (வெள்ளிக்கிழமை) உருவாக இருக்கிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அக்.24, 26, 27, 28 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 7-11 செ.மீ. வரை கனமழைக்கு வாய்ப்பு என்பதால் அக்.24, 26, 27, 28 ஆகிய தேதிகளில் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 26-ந்தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை. விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், 27-ந்தேதி (திங்கட்கிழமை) ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Bank Sea ,Indian Meteorological Center ,Delhi ,Indian Meteorological Centre ,
× RELATED அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ...