மேலப்பாளையத்தில் மிலாது நபி விழா

நெல்லை, டிச. 30:  மேலப்பாளையம் ஞானியாரப்பா ெபரிய தெரு அப்துல்லா குர்ஆன் மதரஸாவின் 10வது ஆண்டு நிறைவு விழா மற்றும் மிலாது நபி விழா நடந்தது. வடக்கு ஆதிமுகைதீன் ஜூம்ஆ மஸ்ஜித் இமாம் ஷாஹ்மதார் ஷாதுலி பாஜில் பாகவி தலைமை வகித்தார். ஷாகுல் ஹமீது, ஆசாத் குத்புதீன், பெரிய தெரு ஜமாஅத்தார்கள், மதரஸா நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முகமது அப்பாஸ் வரவேற்றார்.

நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப், அப்துல்லா குர்ஆன் மதரஸா ஆலோசகர் அலிஹூசைன் நத்வீ, பேராசிரியர்கள் பாஸூம் அல்ஹப் பாஸிஸ், சுமையா பானு முபல்லிகா, யாஸ்மின் இஸ்ஸத், முகம்மது இர்பானா வாழ்த்திப் பேசினர்.

இதையடுத்து பேராசிரியர் முஸ்தபா மஸ்லஹி, அன்னை ஹாஜிரா கல்லூரி தலைவர் செய்யது முகமது, மேலப்பாளையம் பாத்திமா மெட்ரிக் பள்ளி குதா முகம்மது, செய்யது அலி, யூசுப் அலி, இக்பால், பெரோஸ்கான் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர். முகைதீன் பாதுஷா உஸ்மானி நன்றி கூறினார். ஹஸன் ஞானியார் பைஜி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

Related Stories:

>