காஸ் சிலிண்டர் உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ மகளிரணி நூதன ஆர்ப்பாட்டம்

நெல்லை, டிச. 30:  காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து  எஸ்டிபிஐ மகளிர் அணியினர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த சில தினங்களில் மட்டும் காஸ் சிலிண்டர் விலை ரூ.100 வரை உயர்ந்துள்ளது. மத்திய அரசு காஸ்விலையைக் கட்டுப்படுத்தக் கோரியும், திரும்பப் பெற வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணியான ‘விமன்ஸ் இந்தியா மூவ்மென்ட்’ சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மகளிர் அணி மாநகர் மாவட்டத் தலைவர் மஹ்முதா ரினோஷா ஆலிமா தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் நூர் நிஷா, மாவட்டச் செயலாளர் செய்யதுஅலி பாத்திமா, செயற்குழு உறுப்பினர் நூருல் அஜிஷா மற்றும் எஸ்டிபிஐ மாவட்டத் தலைவர் கனி, மாவட்டச் செயலாளர் பர்கித் அலாவுதீன் மற்றும் நிர்வாகிகள் என திரளானோர் பங்கேற்றதோடு காஸ் சிலிண்டருக்கு மாலையணிவித்து விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி கோஷமிட்டனர்.

Related Stories:

More