×

தாம்பரம்-செங்கல்பட்டு 4வது ரயில் வழித்தடம் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு நயினார் நாகேந்திரன் வரவேற்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைத்து புறநகர் ரயில் இணைப்பை வலுப்படுத்தும் வகையில் ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலான 4வது ரயில் வழித்தடத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இப்புதிய தடத்தால், ஆண்டுக்கு 1.344 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு, ரூ.157 கோடி கூடுதல் வருவாய் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ந்து தமிழகத்தின் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தி வளர்ச்சிக்கு தொடர்ந்து வித்திடும் பிரதமர் மோடிக்கும், ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Nainar Nagendran ,Union government ,Tambaram-Chengalpattu 4th ,line ,Chennai ,Tamil Nadu ,BJP ,Tambaram-Chengalpattu ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி