- பொன்னுசாமி
- சட்டமன்ற உறுப்பினர்
- நாமக்கல்
- நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக
- ராஜேஷ் குமார்
- Senthamangalam
- Kollimalai
நாமக்கல், அக்.24: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பொன்னுசாமியின் இறுதி சடங்கு, இன்று (24ம் தேதி) பிற்பகல் 12 மணிக்கு மேல், கொல்லிமலையில் உள்ள அவரது தோட்டத்தில், உரிய அரசு மரியாதையுடன் நடைபெறும். இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் உட்பட அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
