×

நரசிங்கபுரம் சந்தை திடலில் குளம் போல் தேங்கிய மழை நீர்

நரசிங்கபுரம், அக்.24: நரசிங்கபுரம், ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நரசிங்கபுரம் நகராட்சி முன், சந்ைத திடலில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. சந்ைத திடல் வழியாக நரசிங்கபுரம் மற்றும் ஆத்தூரில் இருந்து தளவாய்பட்டி, பழனியாபுரி, அகத்திச்செட்டிபாளையம், மல்லிகரை என நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. பள்ளி மாணவ, மாணவிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளதால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக, நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் முன்பு மழைநீர் தேங்கி உள்ளது. எனவே, தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Narsingapuram Market Square ,NARASINGAPURAM ,ATHUR ,SANITA ,
× RELATED பழைய இரும்பு கடையில் தீ விபத்து