×

கோடநாடு எஸ்டேட் சிசிடிவி கணினி ஆபரேட்டர் மரணம் – தனிப்படை 3 மணி நேரம் விசாரணை

உதகை: கோடநாடு எஸ்டேட் சிசிடிவி கணினி ஆபரேட்டர் தினேஷ்குமார் மரணம் தொடர்பாக தனிப்படை 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். கோத்தகிரி அருகே கொங்கரை கிராமத்தில் தினேஷ்குமார் தந்தை போஜனிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துகின்றனர். தற்கொலைக்கான காரணம் என்ன என்று எங்களுக்கு எதுவும் தெரியாது என தந்தை போஜன் தகவல் அளித்துள்ளார்.தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த வழக்கில் பல்வேறு ரகசிய தகவல்கள் தங்களுக்கு கிடைத்திருப்பதாக கூறி கோத்தகிரி காவல் துறையினர் கடந்த மாதம் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.அதனை கூடுதல் விசாரணை செய்ய வேண்டும் என்பதனால் அனுமதி கோரி மனுதாக்கல் செய்தனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணை மேற்கொள்ளலாம் என அனுமதி வழங்கியதை அடுத்து கடந்த 20 நாட்களுக்கு மேலாக தனிப்படை போலீசார் இந்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் முதற்கட்டமாக விசாரணை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கனகராஜின் மனைவி மற்றும் சகோதரர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் தொழில் ரீதியாக பழகியவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கோடநாடு எஸ்டேட் சிசிடிவி கணினி ஆபரேட்டர் தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது வழக்கில் பல்வேறு ரகசிய தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் எனவே புலன் விசாரணை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக கூறி நேற்றைய தினம் கோத்தகிரி காவல்துறையினர் கோத்தகிரி தாசில்தாரிடம் கடிதம் அளித்துள்ளனர். நேற்று இரவு தனிப்படை போலீசார் தினேஷின் சொந்த ஊரான செங்கரை கிராமத்திற்கு சென்று அவரது தந்தை போஜனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 3 மணி நேரம் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது….

The post கோடநாடு எஸ்டேட் சிசிடிவி கணினி ஆபரேட்டர் மரணம் – தனிப்படை 3 மணி நேரம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kodanad Estate ,Kodanadu ,Dineshkumar ,
× RELATED விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு:...