ஊதியம் வழங்காததை கண்டித்து குடிநீர் பணியாளர்கள் தர்ணா

திருப்பூர், டிச.30: ஊதியம் வழங்காததை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி குடிநீர் பணியாளர்கள் 3ம் மண்டல அலுவலகத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் நான்கு மண்டலங்கள் உள்ளன. அதில், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் என 105 பேர் குடிநீர் பணியாளர்களாக ஆக பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு மாதம் ரூ.4705 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 7 மாதமாக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் மாநகராட்சி 3-வது மண்டலம் அலுவலக நுழைவாயில் முன்பு குடிநீர் திறப்பாளர்கள் 30 பேர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சம்பளம் வழங்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர். இதனால் 3 ம் மண்டல அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>