×

கோவை செழியன் பிறந்தநாள் கொ.ம.தே.க., கொ.மு.க.வினர் மரியாதை

காங்கயம், டிச.30: கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவையின் நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவை செழியனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவரது சொந்த ஊரான காங்கயம் அருகே குங்காருபாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கொங்கு முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் எம்.தங்கவேல் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோவை செழியன் பிறந்தநாள் விழா காங்கயத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. காங்கயம் தாலுகா குங்காருபாளையம் கிராமத்தில் உள்ள செழியனின் நினைவிடத்திற்கு வந்த பல்வேறு அமைப்பினர் மலர் வளையம் வைத்து, மலர்தூவி  மரியாதை செலுத்தினர்.இதில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் மரியாதை செய்யப்பட்டது.

Tags : Coimbatore Chezhiyan ,
× RELATED ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில்...