×

காங்கிரஸ் செயல்வீரர் கூட்டம்

உடுமலை, டிச.30: பெரியகோட்டை ஊராட்சி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் அப்துல்மஜீத் தலைமையில் நடைபெற்றது. வட்டார தலைவர்கள் கனகராஜ், வெங்கடேசன், நகர தலைவர் ரவி, இளைஞர் காங்கிரஸ் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜனார்த்தனன், ஆகியோர் பேசினர்.கூட்டத்தில், புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டிப்பது, மத்திய பா.ஜ. அரசின் தவறான கொள்கைகளால் பொருளாதார வீழ்ச்சிக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Congress Activists Meeting ,
× RELATED முதியவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு