×

நீலகிரியில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை

ஊட்டி, டிச. 30: நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்கள், சாலைகள் மற்றும் பார்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீலகிரி மாவட்டத்தில் வரும் 31ம் தேதி மற்றும் 1ம் தேதி ஆகிய நாட்களில் தமிழ்நாடு மதுபான மற்றும் பேரிடர் மேலாண்மை விதிகள் 2005ன்படி எப்.எல்.2 கிளப்கள், எப்.எல்3 ஓட்டல் பார்கள், தமிழ்நாடு ஓட்டல்கள், எப்.எல்3ஏஇ, எப்.எல்.10 ஆகியவற்றில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் கொண்டாட அனுமதி இல்லை.

புத்தாண்டையொட்டி அனைத்து தனியார் ஓட்டல்கள் மற்றும் கிளப் மற்றும் தனியார் விடுதிகளில் 31ம் தேதி இரவு நேர புத்தாண்டு நிகழ்ச்சிகள் கொண்டாட அனுமதி இல்லை. மேலும், புத்தாண்டையொட்டி பொது இடங்கள் மற்றும் சாலைகளில் 31ம் தேதி மற்றும் 1ம் தேதி புத்தாண்டு நிகழ்ச்சிகள் கொண்டாட அனுமதி இல்லை. மேற்கண்ட விதிமுறைகளை கடைபிடிக்காத எப்.எல்.2 கிளப்கள், எப்.எல். 3 ஓட்டல் பார்கள், தமிழ்நாடு ஓட்டல்கள் எப்.எல். 3ஏஇ, எப்.எல். 10 சம்பந்தப்பட்ட உரிமைதாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனை மீறி யாரேனும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டால், கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர், ஊட்டி (0423-2223802), உதவி ஆணையர் (ஆயம்) அலுவலகம் (0423-2443693) ஆகியோரிடம் உடனடியாக புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

Tags : places ,Nilgiris ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...