×

கொரோனா சிகிச்சை மையத்திற்கு ஜெனரேட்டர் வாங்க ரூ.4.30 லட்சம் நிதி

ஊட்டி, டிச. 30:  கொரோனா சிகிச்சை மையத்திற்கு ஜெனரேட்டர் வாங்குவதற்காக கனரா வங்கி ரூ.4.30 லட்சம் வழங்கியது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் ஜெனரேட்டர்கள் வசதி இல்லாத நிலையில், மின் தடை ஏற்பட்டால், நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால், அனைத்து கொரோனா சிகிச்சை மையங்களுக்கும் ஜெனரேட்டர்கள் தேவைப்பட்டது. இந்நிலையில், ஜெனரேட்டர்கள் வாங்குவதற்காக கனரா வங்கி சார்பில் ரூ.4.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் சத்யராஜா, கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் இதற்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் மோகன குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : purchase ,treatment center ,Corona ,
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!