×

ஊராட்சி, பேரூராட்சிகளில் ‘அம்மா மினி கிளினிக்’

கோவை, டிச. 30: கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி, ஆலாந்துறை பேரூராட்சி, இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இவற்றை திறந்துவைத்தார். பின்னர், 43 கர்ப்பிணிகளுக்கு ரூ.2,000 மதிப்பிலான அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
இதன்பின்னர் அவர் பேசியதாவது:கோவை மாவட்டத்திற்கு 70 அம்மா மினி கிளினிக்குகளை முதல்வர் வழங்கியுள்ளார். அதன்படி, கோவை மாவட்டத்தில்  முதல்கட்டமாக மாநகர பகுதி மற்றும் ஊரக பகுதிகளில்  மினி கிளினிக் துவங்கப்பட்டு வருகிறது. மினி கிளினிக்கில் மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் உடனுக்குடன் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திைர, சளி, காய்ச்சல், போன்றவற்றிற்கான மருந்துகள் போன்றவை மினி கிளினிக்கில் வழங்கப்படுகிறது. கிராமப்புற மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்ெகாள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். இதனைத்தொடர்ந்து, தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ரூ.4.85 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ராஜாமணி,  மாவட்ட வருவாய் அலுவலர் இராம.துரைமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Municipalities ,Mother Mini Clinic ,
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு