உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

சேந்தமங்கலம், நவ.30: புதுச்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா புதன்சந்தையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் துரை.ராமசாமி தலைமை தாங்கி, திமுக கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரவணகுமார் இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், வர்த்தகரணி அமைப்பாளர் நீலமேகம், இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தகுமார், நிர்வாகிகள் பொன்னுசாமி, பெரியசாமி, முருகேசன், வெங்கடாஜலம், தென்னரசு மணிகண்டன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>